உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர் மாயம் :தந்தை புகார்

மாணவர் மாயம் :தந்தை புகார்

திண்டிவனம்: வீட்டை விட்டு சென்ற பத்தாம் வகுப்பு மாணவரை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். திண்டிவனம் மயிலம் ரோடு, இந்திரா நகரில் வசிப்பவர் வெங்கட்ரமணன், 45; தனியார் கம்பெனி ஊழியர். இவரது மகன் மகேந்திரசாய் வர்மன், 14; இவர் ஜெயபுரத்திலுள் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் . இவர் கடந்த 27 ம் தேதி உடல் நிலை சரியில்லாதததால் பள்ளிக்கு செல்ல வில்லை. அடுத்து நாள் சென்ற போது பள்ளி நிர்வாகத்தினர் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று மாணவரை கண்டித்துள்ளனர். மாணவர் படிப்பில் பின்தங்கியிருந்ததால் பள்ளி நிர்வாகம் மாணவரின் பெற்றோரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்நியைில் கடந்த 10 ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவர், மாலை வீடு திரும்பியுள்ளார். மாலை 6.15 மணியளவில் தன்னுடைய தாயாரின் மொபைல்போனை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. மாணவரின் மொபைல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. இதை தொடர்ந்து மாணவரின் தந்தை வெங்கட்ரமணன் திண்டிவனம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் காணாமல்போன மாணவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !