உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக விழா

மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக விழா

விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியின் 28வது முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா நடந்தது. விழாவிற்கு, கல்லுாரிமுதல்வர் ராஜப்பன் வரவேற்றார். மணக்குள விநாயகர் மற்றும் மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளைதலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், அறங்காவல் உறுப்பினர் நிலா பிரியதர்ஷனி முன்னிலை வகித்தனர்.கல்லுாரிஇயக்குநர் செந்தில் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்டி.சி.எஸ் நிறுவனத்திலிருந்து ஐ.ஓ.டி. மற்றும் டிஜிட்டல் இன்ஜினியரிங்கின் தொழில் ஆலோசகர் டேனியல் ஆரோக்கியம், இன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் உள்ள முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வருங்கால எதிர்பார்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்குஅப்துல் கலாம் மாணவர் சங்கம் சார்பில் மரக்கன்றுவழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மயிலம் செவிலியர்கல்லுாரிமுதல்வர் தமிழ்ச்செல்வி, மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்முதல்வர் பாலகிருஷ்ணன் மற்றும் கல்லுாரியின் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ