உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் அரசு கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி

வானுார் அரசு கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் தேவநாதன் வரவேற்றார். திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன், பேசுகையில், 'மாணவர்கள் கல்லுாரியில் படிக்கும்போதே போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டு அதிகாரமிக்க பதவிகளை பெற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு சிறந்த தயாரிப்பு அவசியம்' என்றார். இதில், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். வணிகவியல் துறை மூன்றாமாண்டு மாணவி சுபிக்ஷா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி