உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விபத்தில் கையை இழந்த மாணவி தங்கப் பதக்கம் வென்று சாதனை

விபத்தில் கையை இழந்த மாணவி தங்கப் பதக்கம் வென்று சாதனை

விழுப்புரம்: விழுப்புரம் பள்ளி மாணவி இளமதி, முதல்வர் கோப்பைக்கான போட்டியில், தங்கப் பதக்கம் வென்று, சாதனை படைத்தார்.விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி.ஆர்.சி. பள்ளியில் 8 ம் வகுப்பு பயிலும் மாணவி இளமதி. இவர், ஒரு விபத்தில், தனது வலது முழங்கை வரை இழந்தார். ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்காமல், மிகுந்த ஆர்வத்துடன் கல்வி பயின்று வருகிறார். மேலும், ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட தனித் திறன் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி, பல போட்டிகளில், பரிசு வென்றுள்ளார்.தமிழக முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில், மாவட்ட அளவிலான மாற்றுத்திறன் மாணவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கத்தை வென்றார். குண்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மாவட்ட அளவில் தங்கப் பதக்கம் வென்று, பள்ளிக்கு பெருமை சேர்த்த இளமதிக்கு, தாளாளர் அருட்தந்தை செல்வநாதன், தலைமை ஆசிரியை ஆரோக்கிய ஜெஸிந்தா மேரி, உடற்கல்வி ஆசிரியை சோபியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ