பூப்பந்தாட்ட போட்டியில் மாணவிகள் சாதனை
விக்கிரவாண்டி : மாநில அளவிலான ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டியில் ஒய்காப் பள்ளி மாணவிகள் மூன்றாமிடம் பிடித்தனர். தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் நடந்த 70 வது ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி திருச்சி, கொங்குநாடு பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இந்த போட்டியில் விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் ஒய்காப் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஜூனியர் பிரிவில் விளையாடி மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றனர். இந் த மாணவிகளுக்கு தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக மாநில பொதுச்செயலாளர் விஜய், துணை தலைவர் முத்து மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர் . பரிசுகள் வென்ற மாணவிகளை வேலுார் சி.எ ஸ். ஐ., பேராயர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம், தாளாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ் பாபு ,உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.