மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
12-Nov-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த அனிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகள் ரேஷ்மா, 21; முண்டி யம்பாக்கம் அரசு மருத் துவக் கல்லுாரியில் 4ம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இவர், கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து கல்லுாரிக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12-Nov-2025