தினமலர்-பட்டம் வினாடி- வினா போட்டி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
மயிலம் : செண்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.'தினமலர்' நாளிதழ் பட்டம் இதழ் என்னும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொது அறிவை வளர்க்கும் பொருட்டு வினாடி - வினா போட்டியை பட்டம் இதழ் நடத்தி வருகிறது.மயிலம் பகுதி பள்ளிகளில் முதல் சுற்றாக தகுதி தேர்வு நடத்தி அதில் 16 பேரை தேர்வு செய்து, 8 அணிகளாக பிரித்து மூன்று சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.செண்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்க டி.எஸ்.பி., பிரகாஷ் தலைமை தாங்கி நினைவு கோப்பை, மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். ஊராட்சி தலைவர் முருகன், முன்னாள் சேர்மன் தசரதன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் சாரங்கபாணி முன்னிலை வகித்தனர். விவசாய அணி பாலசுந்தரம், சமூக ஆர்வலர்கள் ரவி, பூபாலன், பூங்காவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வல்லம்
வல்லம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிவகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார். தலைமை ஆசிரியர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். ஆசிரியர்கள் சாகிதா ஜெயராமன், மாலதி, தேவிகா, செந்தில்குமார், கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கப்பை
வல்லம் ஒன்றியம் கப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் கோபால் கேடயம் மற்றும் மெடல்கள் பாராட்டு சான்றுகளை வழங்கி பேசினார். முன்னாள் ஊராட்சி தலைவர் தாமோதரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அருமைச்செல்வம் வரவேற்றார். ஆசிரியர்கள் சங்கர், தர்மலிங்கம், ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரெட்டணை
ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கி கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கினார். பள்ளி முதுநிலை முதல்வர் அகிலா பழனியப்பன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மீனாட்சி வரவேற்றார். ஆசிரியர்கள் அஸ்வினி, ரம்யா, இளவரசி, அனிதா, உமாமகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்