உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கலை கல்லுாரியில் மாணவர்கள் போராட்டம்

அரசு கலை கல்லுாரியில் மாணவர்கள் போராட்டம்

திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில், 'ஷிப்டு' முறையை அமல்படுத்தக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம், கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் 3500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில், நேற்று முன்தினத்தில் இருந்து வகுப்புகள் துவங்கின.இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று காலை 11:30 மணிக்கு, கல்லுாரியை சேர்ந்த நுாற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, கல்லுாரி நுழைவாயில் மற்றும் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டு 'ஷிப்டு'களில் கல்லுாரியில் செயல்பட வலியுறுத்தி, மாணவர்கள் கோஷம் போட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கல்லுாரி முதல்வர் ரங்கராஜன் மனுக்களை பெற்று, கல்லுாரி கல்வி இயக்குனரிடம் அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை