உள்ளூர் செய்திகள்

சப்வே பணி துவக்கம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வடக்கு பைபாசில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அருகே சுரங்க பாதை அமைக்க பணிகள் துவக்கியது. சென்னை விழுப்புரம் 4 வழிச்சாலையில், விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் பகுதியில் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்க மேம்பாலம் கட்ட கடந்த 4 மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கியது. மேம்பாலம் கட்டுமான பணிக்காக, 4 வழிச்சாலையின் இரு புறமும் சர்வீஸ் சாலை அமைத்து, போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. மேலக்கொந்தை - நேமூர் - செஞ்சி சாலைக்கு செல்வதிற்காக, 4 வழி சாலையின் குறுக்கே, 5.5 மீட்டர் உயரமுள்ளசுரங்கபாதை (சப்வே) அமைக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. சென்னை பி.எஸ்.டி., கன்ஸ்டிரக்ஷன் பணியாளர்கள் பொக்லைன் உதவியுடன் பள்ளம் தோண்டி பணிகளை துவக்கி உள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்பால பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என நகாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை