மேலும் செய்திகள்
வாலிபர் தற்கொலை
23-Aug-2025
திண்டிவனம் : திண்டிவனத்தில், வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து, போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிடங்கல் கோட்டை மேடு, ஈஸ்டன்தோப்பு பகுதியை சேர்ந்த பக்தவச்சலம் மகன் விஜய், 25; இவர், நண்பர்கள் அருண், மனோகர் ஆகியோருடன் கடந்த 27 ம் தேதி, இரவு 10:00 மணியளவில் பூதேரியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்தீஷ், சந்தோஷ், கிேஷார், ஜெகதீஷ் ஆகியோர் போதையில், விஜய் மற்றும் அவரது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். அருகில் இருந்தவர்கள், இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். இந்நிலையில் அன்றைய தினம் இரவு 12:30 மணியளவில் எதிர்தரப்பினர் விஜய் வீட்டிற்கு வந்து, அவரை சரமாரியாக தாக்கினர். உடன் இருந்த மனோகர், அருண் ஆகியோரையும் தாக்கி காயப்படுத்தினர். இதுகுறித்து கடந்த 28 ம் தேதி விஜய் திண்டிவனம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வலியுறுத்தி நேற்று காலை, 11:45 மணியளவில், திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தை விஜய் மற்றும் கோட்டை மேடு பகுதியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.
23-Aug-2025