மேலும் செய்திகள்
வயிற்று வலியால் பெண் தற்கொலை
27-Oct-2024
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் வயிற்று வலி தாளாமல் வியாபாரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.விக்கிரவாண்டி மைல்கல் தெருவை சேர்ந்தவர் ஞானவேல்,36:மொபைல் ரீசார்ஜ்,செப்பல் கடை நடத்தி வந்தார் . கடந்த சில வருடங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.நேற்று அதிகாலை 3.00 மணியளவில் வயிற்று வலி தாளாமல் வீட்டில் பேன் கொக்கியில்் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் . இறந்த ஞானவேல் பெயரில் சித்தணியில் சட்டவிரோதமாக சிம்கார்டு விற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்துள்ள புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
27-Oct-2024