முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள முருகர் கோவில்களில், கந்த சஷ்டியையொட்டி சூரசம்கார விழா நடந்தது.கலெக்டர் பெருந்திட்ட வளாகம் பின்புறமுள்ள கோவிந்தசாமி நகர் சிவ விஷ்ணு கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணி சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, சுப்பிரமணியர் சுவாமிகள், சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. இதனையடுத்து, தீபாராதனை நடந்தது. இதே போல், விழுப்புரம் மருத்துவமனை வீதி முருகர் கோவில், கமலா நகர் செல்லியம்மன் கோவில், முத்தாம்பாளையம் முருகர் கோவில்களில் கந்தர் சஷ்டி விழா, சூரசம்ஹாரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திண்டிவனம்
திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று முன்தினம் காலை முருகனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மாலை நடந்த சூரம்ஹார நிகழ்ச்சியின் போது, முருகன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வானுார்
இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில், சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.