உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்கள பணியாளர்களுக்கு கணக்கெடுப்பு பயிற்சி

முன்கள பணியாளர்களுக்கு கணக்கெடுப்பு பயிற்சி

விழுப்புரம் : விழுப்புரத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்ட முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, துவக்கி வைத்து பேசுகையில், 'ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ஏற்படுத்தி மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு சேவைகள் வழங்க உள்ளது. முதல் கட்டமாக 160 முன்கள பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று கணக்கெடுத்தல், மறுவாழ்வு உதவிகள் பெறுவதற்கு மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்' என்றார்.உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி