மேலும் செய்திகள்
'ஏவுகணை நாயகர்' அப்துல் கலாமும்... பெங்களூரும்!
27-Jul-2025
வானுார்: தைவான்-ஆரோவில் இடையே கல்வி, தொழில்நுட்பம் ஒத்துழைப்பை உருவாக்க விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தைவான் துாதரக பொது இயக்குநர் ஸ்டீபன் தெரிவித்தார். தைவான் துாதரகத்தின் பொது இயக்குநர் ஸ்டீபன் , உதவியாளர்கள் சாய் மிங் ஷுன், சாவோ சாங் லஞ்ச் ஆகியோருடன் இணைந்து, கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராயும் நோக்கில் ஆரோவில்லுக்கு சிறப்பு வருகை புரிந்தனர்.வருகையின் முதல் பகுதியாக, குழுவினர் ஆரோவில்லின் ஆன்மிக மையமான மாத்ரிமந்திரில் தியானத்தில் பங்கேற்றனர். பின்னர் குழுவினர் அரவிந்தர் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்று, லிஜுன் மற்றும் டாக்டர் சஞ்ஜீவ் ரங்கநாதன் ஆகியோரை சந்தித்தனர். இங்கு ஆரோவில்லின் தனித்துவமான கல்வி தத்துவம், அரவிந்தரின் பரந்த பார்வை மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான புதுமையான கல்வி அணுகுமுறைகள் குறித்து விரிவான விவாதம் நடந்தது. தொழில்நுட்ப பரிமாற்ற கலந்துரையாடலில், தைவானின் மேம்பட்ட மின்னணு சிப் உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் ஆரோவில்லின் ஸ்டெம் லேண்ட் பிரிவின் செயல்பாடு, மின் வினியோக மதர்போர்டு வடிவமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டன. பொது இயக்குநர் ஸ்டீபன் கூறுகையில் 'மனித ஒற்றுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஆரோவில்லின் உன்னத பார்வை, தைவானின் சமூக பொறுப்புணர்வு கொண்ட தொழில்நுட்ப வளர்ச்சி இலக்குகளுடன் மிக நன்றாக ஒத்துப்போகிறது. மிக விரைவில் தைவான்-ஆரோவில் இடையே கல்வி, தொழில்நுட்பம், நிலையான வளர்ச்சி ஆகிய முக்கிய துறைகளில் மிக அற்புதமான ஒத்துழைப்பை உருவாக்கி, இந்தியாவுடனான எங்கள் வலுவான நட்புறவை மேலும் வலுப்படுத்துவேன்,' என்றார்.
27-Jul-2025