மேலும் செய்திகள்
உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
30-Aug-2025
செஞ்சி; செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் தமிழக அரசு சார்பில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹமான் தலைமை தாங்கினார். பயிற்சி கலெக்டர் வெங்கடேஷ்வரன், கல்லுாரி தாளாள் ரங்கபூபதி முன்னிலை வகித்தனர். திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரி முதல்வர் நாராயணன் வரவேற்றார். எதுவும் நமக்கான களம் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஷைலேந்திரபாபு தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார். மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். டி.ஆர்.ஓ., ஹரிதாஸ், கல்லுாரி டீன் மணிகண்டன், விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பச்சையப்பன், தாசில்தார் துரைசெல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கண்ணன் தொகுத்து வழங்கினார். கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி நன்றி கூறினார். இதில் தமிழ் மரபு, தமிழ் இலக்கியம் குறித்து மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடந்தது. இந்த போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசு வழங்கப் பட்டது.
30-Aug-2025