உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் அரசு கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

வானுார் அரசு கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, தமிழ் பிழை இல்லாமல் பேசுவதற்கும், எழுதுவதற்கும், தமிழ் பேராசிரியர்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அதை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார். இணைப்பேராசிரியர் அருளமுதம் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் இளங்கோ நோக்கவுரையாற்றினார். புதுச்சேரி எழுத்தாளர் சீனு தமிழ்மணி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்மொழியின் வரலாறு குறித்து எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். உதவிப் பேராசிரியர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை