உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தேசிய அளவிலான பென்காக் சிலாட் போட்டிக்கு தமிழக அணி தேர்வு

 தேசிய அளவிலான பென்காக் சிலாட் போட்டிக்கு தமிழக அணி தேர்வு

விழுப்புரம்: தேசிய பென்காக் சிலாட் விளையாட்டுப் போட்டிக்கு, தமிழக அணி தேர்வு விழுப்புரத்தில் நடந்தது. அகில இந்திய அளவிலான 3வது, பென்காக் சிலாட் விளையாட்டு போட்டிகள், இம்மாதம் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான தமிழக அணி தேர்வு போட்டி, விழுப்புரத்தில் மாநில அளவில் நடந்தது. விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த தேர்வு போட்டியை, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் துவக்கி வைத்தார். பென்காக் சிலாட் விளையாட்டு சங்க மாநில செயலாளர் மகேஷ்பாபு தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். போட்டியில், தமிழகத்தின் 28 மாவட்டங்களிலிருந்து 287 வீரர்கள், வீராங்கனைகள் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்படுவதற்கான திறமையை வெளிப்படுத்தினர். ஏற்பாடுகளை மாவட்ட பென்காக் சிலாட் சங்க தலைவர் மாஜிசிங், செயலாளர் பரந்தாமன் செய் தனர். 115 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ