உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டாஸ்மாக் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : பெஞ்சல் புயல், வெள்ளத்தில் சிக்கி இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி, அனைத்து டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி., டாஸ்மாக் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சவுரிராஜன், சி.ஐ.டி.யூ., செயலாளர் மூர்த்தி, துணைத் தலைவர் குமார், நிர்வாகக்குழு சரவணன் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், வெள்ளத்தில் சிக்கி இறந்த குண்டலப்புலியூர் டாஸ்மாக் கடை விற்பனையாளர் சக்திவேல் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !