உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமி கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது

சிறுமி கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது

மயிலம்: மயிலம் அருகே சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.மயிலம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஹரிஷ், 21; இவர், 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 21ம் தேதி சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விட்டு சிறுமியின் பெற்றோர் விவசாய பணிக்காக சென்று விட்டனர்.இதனையறிந்த ஹரிஷ், சிறுமியை பைக்கில் கடத்திச் சென்றுள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர் மயிலம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து நேற்று முன்தினம் பெரும்பாக்கத்தில் இருந்த ஹரிைஷ கைது செய்து, சிறுமியை மீட்டு விழுப்புரத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை