உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவில் உண்டியல் உடைப்பு காணிக்கை பணம் திருட்டு

கோவில் உண்டியல் உடைப்பு காணிக்கை பணம் திருட்டு

வானுார்: கிளியனுார் அருகே 2 கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கிளியனுார் அடுத்த ஆதனப்பட்டு கிராமத்தில் ஊருக்கு வெளியே அய்யனாரப்பன் மற்றும் மயிலை அம்மன் கோவில்கள் உள்ளன. நேற்று காலை அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் 2 கோவில்களின் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போன நிலையில் கிடந்துள்ளது.தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து அப்பாசாமி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து 2 கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ