உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், : தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோலியனுார் சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பெரியசாமி, பனமலைபேட்டை உமையாள்புரம் சங்க தலைவர் கணேசன், செயலாளர் தணிகைவேல் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன் கண்டன உரையாற்றினார்.கோலியனுார், பனமலை பேட்டை மதுரா உமையாள்புரம் கிராமங்களில் கோவிலுக்கு தொடர்பில்லாத இனாம் நிலங்களை தவறாக மாற்றப்பட்ட யூ.டி.ஆர்., வைத்து உரிமை கொண்டாடுவதை நீக்கம் செய்ய வேண்டும்.இனாம் இடங்களில் வசிப்போருக்கு, தமிழக அரசு, ஆந்திரா, கர்நாடகா அரசை போல் இனாம் ஒழிப்பு சட்டத்தில் காலவரையறையை நீட்டிக்க திருத்தம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.செயலாளர் பாலாஜி, கவுரவ தலைவர் ஆனந்தராஜ், தலைமை நிர்வாகி மஞ்சுளா, பொருளாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.துணைச் செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !