உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

விழுப்புரம்: கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் அருகே காணை கிராமத்தில், திருக்கோவிலுார் பிரதான சாலையில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மாலை பூஜை முடித்து நிர்வாகிகள், கதவை பூட்டிச் சென்றனர். இந்நிலையில், நள்ளிரவில் மர்ம நபர்கள், கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து, காணிக்கை பணத்தை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை