மேலும் செய்திகள்
திருநகரில் ரோடு சேதம்
22-Oct-2025
திண்டிவனம்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, திண்டிவனத்தில் சாலை பள்ளங்கள் சீரமைக்கப்பட்டன. திண்டிவனம் மேம்பாலம் கீழ் வழியாக புதுச்சேரி, மரக்காணம் பகுதிகளுக்கு பஸ்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி அவதியடைந்து வந்தனர். இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, இந்த பள்ளங்கள் ஜல்லி மற்றும் சிமென்ட் கலவை கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. விரைந்து நிரந்தரமாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22-Oct-2025