மேலும் செய்திகள்
தள்ளுபடி விலையில் புத்தகம் வாங்க, சேலம் வாங்க!
03-Dec-2024
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதித்த மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பை, சீருடை வழங்கும் பணி நேற்று துவங்கியது.விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 10 ஆயிரம் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்கள், பைகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகம், பைகளை இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் சேதமான பள்ளிகள் சீரமைக்கப்பட்டு, நேற்று திறக்கப்பட்டன. மாணவர்கள், தடையின்றி படிப்பதற்காக, அவர்களுக்கு தேவையான புத்தகங்கள், பைகள் போன்றவற்றை பள்ளிகள் மூலம் உடனே வழங்க கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பாட புத்தகங்கள், புத்தக பைகள், சீருடைகளை வழங்கினார். இதே போல், மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில், மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள், பை, சீருடை, ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது.
03-Dec-2024