உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / களம் இறங்க காத்திருக்கும் மாஜி : பரபரப்பாகும் மயிலம் தொகுதி

களம் இறங்க காத்திருக்கும் மாஜி : பரபரப்பாகும் மயிலம் தொகுதி

செஞ்சி: மயிலம் தொகுதியில் களம் காண மாஜி அமைச்சர் தயாராகி வருகிறார். அ.தி.மு.க., பொதுச் செயலாளராக ஜெ., இருந்த போதே தற்போதைய மாவட்ட செயலாளர் சண்முகத்திற்கும், மாஜி எம்.பி., ஏழுமலைக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. எப்படியாவது சண்முகத்திடம் இருந்து மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவியை பிடிக்க சசிகலா, தினக ரன் மூலம் ஏழுமலை அப்போது முயற்சி எடுத்தார். எல்லா வற்றையும் சமாளித்து மாவட்ட செயலாளர் பதவியும், மந்திரி பதவியையும் சண்முகம் தக்க வைத்துக் கொண்டார். ஜெ., இறந்ததும் கட்சி சசிகலாவிடம் வந்து விடும் என ஏழுமலை நம்பினார். ஆனால் அதுவும் நிறைவேறாமல் சசிகலா சிறைக்கு போனதும் கட்சி பழனிசாமியிடம் போனது. இதன் பிறகு சண்முகம் கை ஓங்கியது. ஏழுமலையை கட்சியை விட்டு அனுப்ப சரியான சந்தர்ப்பத்துக்காக சண்முகம் காத்திருந்தார். அதற்கு ஏற்றார் போல் கடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க., கூட்டணியில் செஞ்சி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் ராஜேந்திரன், தேர்தல் பிரசாரம் நடந்த போதே மாஜி எம்.பி., ஏழுமலை மீது அ.தி.மு.க., தலைமைக்கு புகார் அனுப்பினார். அந்த புகாரை காரணம் காட்டி மாஜி எம்.பி., ஏழுமலையை பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கினார். அப்போதே சசிகலா தரப்பில் ஏழுமலைக்கு துாது விட்டனர். ஆனாலும், அ.தி.மு.க., வின் எந்த அணியிலும் சேராமல் இருந்த ஏழுமலை மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைய பழ னிசாமியை அணுகினர். சந்தர்ப்பம் வரும் போது சேர்த்து கொள்கிறேன் என பழனிசாமி கூறியதால் ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்தார். ஆனால், மாவட்ட செயலாளர் சண்முகத்தை மீறி, பழனிசாமி தன்னை அ.தி.மு.க.,வில் சேர்க்க மாட்டார் என்பது உறுதியானதும் ஏழுமலை பன்னீர் செல்வம் அணியில் சேர்ந்து மாவட்ட செயலாளரானார். அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகம் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மயிலம் தொகுதியில் சண்முகத்துக்கு நெருக்கடி கொடுக்க மாஜி., எம்.பி., ஏழுமலை சட்டசபை தேர்தலில் களம் இறங்க போவதாக அவரோட ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். மயிலம் தொகுதியில் பாதியளவாக உள்ள வல்லம், ஒலக்கூர் ஒன்றியங்கள், தொகுதி சீரமைப்பிற்கு முன்பு செஞ்சி சட்டசபை தொகுதியில் இருந்தன. அப்போது, 2001 முதல் 2006 வரை எம்.எல்.ஏ.,வாக ஏழுமலை இருந்தார். எனவே அவருக்கு பரிட்சையமானவர்கள் தொகுதியில் நிறைய பேர் இருக்காங்க, ஏழுமலை போட்டியிட்டால் சண்முகத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அ.தி.மு.க., வில் இரு துருவங்களாக இருந்த சண்முகமும், ஏழுமலையும் எதிரும் புதிருமாக போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால் மயிலம் தொகுதி யில் தேர்தல் பிரசாரத்தின் போது பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ