உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துறை அமைச்சரும் பார்த்தாச்சு... 3 ஆண்டுகளும் போயாச்சு... குடியிருப்புகளுக்கு விமோசனம் இல்லை

துறை அமைச்சரும் பார்த்தாச்சு... 3 ஆண்டுகளும் போயாச்சு... குடியிருப்புகளுக்கு விமோசனம் இல்லை

விழுப்புரம், மகாராஜபுரத்தில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், பல ஆண்டுகளாக பயனற்று கிடக்கிறது. விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோட்டில், அரசு வீட்டுவசதி வாரியம் கட்டுபாட்டின் கீழ், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு வீடுகள், கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் வீடுகள் கட்டப்பட்டது. இங்கிருந்த 192 வீடுகள் பராமரிப்பு குறைந்து, முற்றிலுமாக சிதிலமடைந்தது. இதனால், குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டனர். இந்த கட்டடங்களை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டுவதற்கான கோப்புகள் அரசுக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, மகாராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை நேரில் பார்வையிட்டார். ஆய்வுக்குப் பின், சேதமான கட்டடங்களை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக வீடுகள் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து 3 ஆண்டு நிறைவடைந்த பின்னரும், கட்டடங்கள் அகற்றப்படவில்லை. புதிதாக வீடுகள் கட்டுவதற்கான திட்டமும் அறிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை