சிகிச்சைக்கு சென்றவர் மயங்கி விழுந்து பலி
மரக்காணம் : மரக்காணத்தில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றவர் மயங்கி விழுந்து இறந்தார்.மரக்காணம் அடுத்த முதலியார்பேட்டையை சேர்ந்தவர் முத்து, 50; இவர் நேற்று மதியம் இடுப்பு வலி என கூறி மரக்காணம் பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். முன்னதாக மருத்துவமனை அருகில் உள்ள டீ கடையில் டீ குடிக்க நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.