மேலும் செய்திகள்
உண்டியல் உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
01-May-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர் வீட்டில் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் பூந்தோட்டம், நாராயணன் நகரைச் சேர்ந்த பிரகாஷ், 46; மின் வாரியத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டின் அறையில் குடும்பத்துடன் துாங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவு வீட்டின் மாடி வழியாக கதவை உடைத்து உள்ளே புகுந்த 2 மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை உடைக்க முயன்றபோது அங்கு துாங்கிக் கொண்டிருந்த பிரகாஷ் எழுந்து கூச்சலிட்டார்.உடன் அங்கிருந்த 2 மர்ம நபர்களும் தப்பியோடினர். பின்னர் வீட்டில் பார்த்தபோது, அறைக்கு வெளியே வைத்திருந்த விலை உயர்ந்த மொபைல்போன் மற்றும் அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. துாங்கியவர்கள் விழித்ததால் பீரோவில் இருந்த நகை, பணம் தப்பியது. பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் மற்றும் கைரேகை பிரிவு நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
01-May-2025