உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இருக்கு ஆனா இல்லை மரத்தடியில் பத்திரப்பதிவு

இருக்கு ஆனா இல்லை மரத்தடியில் பத்திரப்பதிவு

செஞ்சி அடுத்த வல்லத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. துவக்கத்தில் இதற்கென கட்டப்பட்ட அலுவலக கட்டடம் இடிந்து சேதமானதால், கடந்த ஆண்டு 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட பணிகள் துவங்கியது.பழைய கட்டடத்தை இடித்து விட்டதால் இங்கிருந்த அலுவலகம் வாடகைக்கு தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. வாடகை கட்டடம் போதுமானதாக இல்லாததால் பெரும்பாலான பணிகளை கட்டடத்திற்கு வெளியே மரத்தடியில் டேபிள் சேர் போட்டு செய்து வருகின்றனர்.பொது மக்கள் உட்கார இடமில்லை. குடிநீர், கழிவறை வசதியும் இல்லை. மழையின் போது பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்படுகின்றன.இந்நிலையில் புதிய கட்டடப்பணிகள் மூன்று மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டன. இதன் பின்னரும் என்ன காரணத்தினாலோ அலுவலகத்தை திறக்காமல் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ