மேலும் செய்திகள்
பஞ்சவடீயில் புரட்டாசி சிறப்பு பூஜை
19-Sep-2025
திண்டிவனம்:பஞ்சவடி ஷேத்திரத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, மத்திய திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நாளை திருப்பாவாடை உத்சவம் விமர்சையாக நடத்தப்படுகிறது. திண்டிவனத்தில் இருந்து, புதுச்சேரி நெடுஞ்சாலையில், 29 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது பஞ்சவடி ஷேத்திரம். மத்திய திருப்பதி என அழைக்கப்படும் இங்கு, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி, ஜெயமங்கள வலம்புரி மகா கணபதி, 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர். திருமலை திருப்பதியில் நடைபெறுவது போலவே, இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமையன்று, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சுவாமிக்கு திருப்பாவாடை உத்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை வைகானசஆகம முறைப்படி பஞ்சவடி ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சன்னிதியில் திருப்பாவாடை உத்சவமும், நேத்ரதரிசன சேவையும் நடக்கிறது. புரட்டாசி மாதத்தின் நான்காவது சனிக் கிழமையான அக்., 11ம் தேதி மஹா சிறப்பு அன்னதானம் மற்றும் விசேஷ பிரசாதம் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட்ஸ் தலைவர் கோதண்டராமன் தலைமையில் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
19-Sep-2025