பிராமணர் சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை
செஞ்சி : செஞ்சியில் திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செஞ்சி கே.டி.ஏ., திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிராமண சங்கம் சார்பில் மகாலட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு மகாலட்சுமி அம்மன் பிரதிஷ்டை செய்து, கலச பூஜையும், மகா கணபதி ஹோமமும் நடந்தது. தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். பாலசுப்ரமணிய ஸ்வாமிகள் திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தார். இதில் பங்கேற்ற பெண்களுக்கு மங்கள பொருட்களை பிரசாதமாக வழங்கினர். இதில் தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் லஷ்மணன், கிளை பொதுசெயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் ராமச்சந்திரன், மகளிரணி செயலாளர் சங்கீதா பிரபாகரன், இளைஞரணி செயலாளர் ஜெகதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.