உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மொபட்டில் 2 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது

மொபட்டில் 2 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது

விழுப்புரம்: மொபட்டில் 2 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார், ஜானகிபுரம் மேம்பாலம் அருகே நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மொபட்டில் வந்த மூவரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில், கண்டம்பாக்கம் காலனி மாதேஷ், 22; விழுப்புரம் என்.ஜி.ஜி.ஓ., காலனி விக்னேஷ், 23; கணேஷ், 23; என்பதும், 2 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து, மொபட் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய கண்டம்பாக்கம் காலனி நாராயணசாமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !