தொடர் மழையால் திண்டிவனம் ஏரிகள் நிரம்பின
திண்டிவனம்: திண்டிவனம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், ஏரிகள் நிரம்பி வருகிறது. வடகிழக்கு பருவ மழையால், திண்டிவனம் பகுதியில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அதன்படி, திண்டிவனம் கிடங்கல் 1 ஏரி மற்றும் காவேரிப்பாக்கம் ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.