உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பகல் நேரத்தில் தெரு விளக்குகள் எரிவதை தடுக்க கண்ட்ரோல் சென்சார் கருவி திண்டிவனம் நகராட்சி ஏற்பாடு

பகல் நேரத்தில் தெரு விளக்குகள் எரிவதை தடுக்க கண்ட்ரோல் சென்சார் கருவி திண்டிவனம் நகராட்சி ஏற்பாடு

திண்டிவனம்:திண்டிவனம் நகராட்சி பகுதியில் பகல் நேரத்தில் மின் விளக்குகள் எரிந்து மின்சாரம் வீணாவதை தடுக்கும் வகையில் மின் கம்பங்களில் கண்ட்ரோல் சென்சார் கருவி அமைக்கப்பட உள்ளது.திண்டிவனம் நகராட்சியிலுள்ள 33 வார்டுகளிலுள்ள தெருக்களில் எல்.இ.டி.,விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல விளக்குகளுக்கு சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பகல் நேரத்தில் எரிவதை தடுக்க முடியும். ஆனால் பல தெருக்களில் மின் விளக்குகள் பகல் முழுதும் எரிகிறது. இப்படி பகல் முழுதும் மின் விளக்குகள் எரிவதால், பல ஆயிரம் யூனிட் மின்சாரம் வீணாகிறது. மேலும், திண்டிவனம் நகராட்சி மின்துறைக்கு கூடுதல் கட்டணம் செலுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, திண்டிவனம் நகராட்சியின் கீழ் உள்ள அனைத்து தெருக்களிலும் மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை மட்டும் எரியும்வகையில் கண்டேரால் சென்சார் கருவி பொறுத்துப்பட உள்ளது. இதற்காக நாமக்கல்லிருந்து நேற்று லாரி மூலம் நகராட்சிக்கு சென்சார் கருவி வரவழைக்கப்பட்டது. இந்த கருவியை, நகராட்சியிலுள்ள ஒவ்வொரு தெருக்களிலும் பொறுத்தும் பணி விரைவில் நடக்க உள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி