உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருவண்ணாமலை பா.ம.க. மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை பா.ம.க. மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு அழைப்பு

மயிலம்: திருவண்ணாமலையில் நடக்கும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாட்டில் மயிலம் தொகுதியில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும் என எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.கூட்டேரிப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிவக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க., அவைத்தலைவர் புகழேந்தி வரவேற்றார். பா.ம.க., ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, முத்துகிருஷ்ணன், சண்முகம், ராஜு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில்தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி பேசுகையில், திருவண்ணாமலை மாநாட்டிற்கு ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க அழைப்புவிடுத்தார். செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன் செங்கேணி, மாவட்ட வன்னியர் சங்க துணைத் தலைவர் அன்புமணி, அமைப்பு செயலாளர் பழனிவேல், அறவாழி ஆகியோர் பேசினர். இதில் ஒன்றிய கவுன்சிலர் கோபால், இளைஞர் அணி பிரேம்குமார், தனசேகர் , மாவட்ட தொழிற்சங்க தேசிங்கு , முருகன், தனசேகர், ராமமூர்த்தி ராஜேந்திரன், ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் தொண்டர்கள் திருவண்ணாமலை உழவர் பேரியக்க மாநாட்டில் கலந்து கொள்ளுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ