உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயானக் கொள்ளை உற்சவம்

மயானக் கொள்ளை உற்சவம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் பெரியபாளையத்தம்மன், அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு சக்தி கரகம் ஜோடித்து பெரியபாளையத்தம்மன் மற்றும் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.அம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. பக்தர்கள் காளி குறத்தி வேடமிட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழு சுலோசனா, பாலாஜி, பிரபாகரன் மற்றும் இளைஞர்கள் முன்னின்று செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி