மேலும் செய்திகள்
மயிலம் அருகே பஸ் கவிழ்ந்து 21 பயணிகள் படுகாயம்
23-Oct-2025
மயிலம்: மயிலம் அடுத்த கேணிப்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் டிராக்டரின் பின்னால் மோதியதில் சாலையோர பள் ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த ரவி, 54; இவரது நண்பர் கோவடி 52; என்பவருடன் நேற்று காலை சிந்தாமணியில் இருந்து திண்டிவனம் நோக்கி டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். 5:00 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மயிலம் அடுத்த கேணிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பஸ் டிராக்டரின் பின்னால் மோதியது. இதில் டிராக்டர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ரவி, கோவடி ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர். ஆம்னி பஸ்ஸில் வந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Oct-2025