உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதையில் ஆட்டோ ஓட்ட கூடாது; போக்குவரத்து போலீசார் அறிவுரை

போதையில் ஆட்டோ ஓட்ட கூடாது; போக்குவரத்து போலீசார் அறிவுரை

திண்டிவனம் ; திண்டிவனத்தில், போக்குரவத்து போலீசார் சார்பில் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். திண்டிவனம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். ஆட்டோ ஓட்டுநர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பள்ளிக்குச் செல்லும் ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடாது, தேவையில்லாமல் சாலையில் ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது.குறிப்பிடப்பட்டுள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்த வேண்டும். மது மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்தி விட்டு ஆட்டோக்களை ஓட்டக்கூடாது.ஆட்டோ டிரைவர்கள் சீருடை அணிந்து இயக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான நபர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.விதிமுறை மீறி ஆட்டோக்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
நவ 24, 2024 07:46

போதையில் ஆட்டோ ஓட்ட கூடாது. ஆனால் விலை உயர்ந்த கார் ஓட்டலாம். ஜாலியாக கொஞ்ச பேர் மீது ஏற்றலாம். காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்து அடிக்கலாம். ்ா


புதிய வீடியோ