உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆடு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

ஆடு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

வானுார் : புளிச்சப்பள்ளம் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் ஆடு வளர்ப்பு குறித்த விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வானுார் வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ் தலைமை தாங்கி, வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், நடப்பு சம்பா சாகுபடிக்கு உகந்த நெல் ரகங்கள் குறித்தும் விளக்கினார். புளிச்சபள்ளம் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். கால்நடை டாக்டர் சங்கவி ஆடு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். மேலும், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, திரவ உயிர் உரங்கள் வழங்கப்பட்டது. முகாமில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் வாழ்வரசி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மஞ்சு, ஆத்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ