கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை
வானுார் : அரசு கலைக்கல்லுாரி தொழில் வளர்ச்சி பயிற்சி பட்டறையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் செயல்படும் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டி அமைப்பின் சார்பில், 3ம் ஆண்டு மாணவர்களுக்கு, தொழில் வளர்ச்சி பட்டறை நடந்தது. வேலை வாய்ப்பு அதிகாரி காந்திமதி வரவேற்றார். இந்த பயிற்சி பட்டறைக்கு கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், 'மாணவர்களின் கல்விப்பயணத்தில் சரியான கல்வி மற்றும் தொழிலை தேர்வு செய்யவும், அதற்கு தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்,' என்றார். சிறப்பு விருந்தினர்களாக ஆரோவில் அறக்கட்டளை கல்வி அமைப்பின் பயிற்றுநர்கள் ஹாலினி குமார், லோகஸ்ரீ, ரவிவர்மா ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கடும் உழைப்பு, தொலைநோக்கு பார்வை, திட்டமிடுதல் குறித்து பயிற்சி அளித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆல்பர்ட் பிரபாகரன் நன்றி கூறினார்.