மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
30-Oct-2026
செஞ்சி: செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழும முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சின்னசாமி முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஆசிரியர்கள் படவேட்டான், ஆரோக்கிய மேரி, சாந்தி, நசரத் பி, ரோட்டரி உறுப்பினர்கள் தில்லை கண்ணன், அர்ஜுன், அபிஷேக், ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
30-Oct-2026