உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது

ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது

விழுப்புரம்: ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கண்டம்பாக்கம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கிராமங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை திட்டத்தில், இப்பணிகளை மேற்கொள்ள கிராம ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் அடுத்த கோலியனுார் ஒன்றியம், கண்டம்பாக்கம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்குமார் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். ஊராட்சி துணைத் தலைவர் பிருந்தாவதி, ஊராட்சி செயலாளர் அருண், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், சுகாதார ஊக்குநர்கள் கங்கா, புஷ்பராணி, பணிதள பொறுப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் கிராம மக்கள், கிராமத்தில் உள்ள காலி இடங்களில் பயன் தரும் மரக்கன்றுகள் நட்டனர். தொடர்ந்து, கிராமம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ