தீவிரவாதிகள் தாக்குதல் இறந்தவர்களுக்கு அஞ்சலி
செஞ்சி: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களுக்கு செஞ்சியில் அகில இந்திய இந்து மக்கள் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். செஞ்சி நான்கு முனை ரோட்டில் நேற்று மாலை அகில இந்திய இந்து மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிறுவன தலைவர் செஞ்சி ராஜா தலைமையில் நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வேரோடு அழிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.