உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நின்ற லாரி மீது பைக் மோதி இரு வடமாநில வாலிபர் பலி

நின்ற லாரி மீது பைக் மோதி இரு வடமாநில வாலிபர் பலி

விக்கிரவாண்டி'விக்கிரவாண்டி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில், வடமாநில தொழிலாளர்கள் இருவர் இறந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம், வில்முருக்கியை சேர்ந்தவர் அமனோரியான், 26; வில் நவுதியாவை சேர்ந்தவர் ராம்ராஜ்ராம், 26; இருவரும் விக்கிரவாண்டி அடுத்த மேல்பாதியில் சக்திவேல் என்பவரிடம் கேபிள் புதைக்கும் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் பைக்கில் திருக்கனுார் சென்று மேல்பாதிக்கு திரும்பியபோது, வழியில் தொரவி அருகே சாலையோரம் நின்றிருந்த எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரியின் பின்னால் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விக்கிரவாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை