மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தியவர் கைது
26-Oct-2025
வானுார்: மரக்காணம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்கள் பதுக்கிய பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மரக்காணம் அடுத்த கோட்டிக்குப்பம் கிராமத்தில் சிலர் புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக எஸ்.பி., சரவணனுக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி., கந்தசாமி மேற்பார்வையில், கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் அறிவழகி மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுக்களை பதுக்கி வைத்திருந்த கலிக்குப்பம், ராஜா மகன் ஆகாஷ், 22; கோட்டிக்குப்பம் ராஜேந்திரன் மனைவி கருணாகி, 40; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, 800 மதுபாட்டில்கள், 105 சாராய பாக்கெட்டுகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
26-Oct-2025