போதை ஆசாமி தாக்கி பெண் உட்பட 2 பேர் காயம்
விக்கிரவாண்டி: கடையில் புகுந்து இருவரை தாக்கிய போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கெடார் கிராமத்தை சேர்ந்தவர் மணி, 55; பழக்கடை வியாபாரி. நேற்று முன்தினம் மாலை கடையில் அவரும் மருமகள் ஜெயா, 25; என்பவரும் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அதே ஊரை சேர்ந்த மணிகண்டன், 46; என்பவர் குடிபோதையில் கடையில் புகுந்து பழங்களையும் , கடை கண்ணாடி கதவு மற்றும் அங்கிருந்த பைக்கையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி இருவரையும் தரக்குறைவாக பேசி தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது பற்றிய புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிந்து போதை ஆசாமியை தேடி வருகின்றனர்.