உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடியிருப்புகளில் வடியாத வெள்ளநீர்

குடியிருப்புகளில் வடியாத வெள்ளநீர்

விழுப்புரம்: விழுப்புரத்தில் வெள்ள நீர் இன்னமும் வடியாததால் ஆசிரியர் நகர் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.விழுப்புரம் நகரில் பெஞ்சல் புயல் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. நீர் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் இறைத்து வருகின்றனர்.இருப்பினும், ஒரு வாரம் கடந்த நிலையில், இன்னமும் சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.விழுப்புரம் - கிழக்கு பாண்டிரோடு, ஆசிரியர் நகர் பகுதியில் கனமழையின்போது 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சூழ்ந்தநீர் வடியவில்லை. சாலைகள் இருக்கும் இடம் தெரியாத அளவில் 4 அடி ஆழம் வரை நீர் சூழ்ந்துள்ளது.இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், தேங்கியுள்ள நீரில் பூச்சிகள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் வருவதால் அச்சத்துடன் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்னர்.அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு மழை வெள்ள நீரை ழுதுமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !