உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அடையாளம் தெரியாத நபர் லாரி டயரில் சிக்கி பலி

அடையாளம் தெரியாத நபர் லாரி டயரில் சிக்கி பலி

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு 9:40, மணியளவில் பழைய சந்தை மேட்டு பகுதி அருகே திருவண்ணாமலையிலிருந்து சேத்பட் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் அந்த லாரியின் பின்னால் வேகமாக ஓடிச்சென்று , லாரியின் பக்கவாட்டு வளையத்தை பிடித்து தொங்கினார். இதைத்தொடர்ந்து சிறிது துாரம் லாரி சென்றதும், அவரது கைப்பிடி நழுவியது. இதையடுத்து அவர் பின்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாகபமாக உயிரிழந்தார். 55 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இது குறித்து வி.ஏ.ஓ., கார்த்திகேயன் புகார் அளித்தார். இதன் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !