உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் மீது பைக் மோதல் வேன் உரிமையாளர் பலி

பஸ் மீது பைக் மோதல் வேன் உரிமையாளர் பலி

திருவெண்ணைநல்லுார் : திருவெண்ணைநல்லுார் அருகே தனியார் பஸ் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சார்லஸ், 22; வேன் உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் - எல்லீஸ்சத்திரம் சாலை வழியாக ஹீரோ கிளாமர் பைக்கில் விழுப்புரம் சென்றார்.ஏமப்பூர் முத்தையா நகர் அருகே சென்றபோது அங்கு பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் மீது சார்லஸ் ஓட்டிச் சென்ற பைக் மோதியது. இதில், சார்லஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை