மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ., சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
20-Sep-2024
விழுப்புரம் : தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். இணை செயலாளர் ஜெயராமன், துணை தலைவர் வெற்றிகொண்டான், சட்டப்பிரிவு செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் கண்டன உரையாற்றினார். டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் செயலியில் உள்ள குறைபாடுகளை களையக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் மணவாளன், அய்யனார், லோகநாதன், ராஜேஷ் பாண்டியன், பிரேம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றிவேந்தன் நன்றி கூறினார்.
20-Sep-2024